திங்கள், 15 டிசம்பர், 2008

மலையும்,மகாதேவனும்

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அரசு, ஊடக வட்டாரங்களில் ஒரு கருத்து வலுவாக உருவாக்கப்படுகிறது.அது என்னவெனில் ஒற்றாடல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அது. இத்தகைய ஒரு கருத்தை கேட்கும்போது அது என் சிறிய வயதில் நான் படித்த ஒரு கதையைத்தான் நினைவூட்டுகின்றது .

ஒரு குக்கிராமத்தில் ஒரு பெரும் மலை ஒன்று இருந்தது.அக்கிராம மக்கள் பிற ஊராருடன் தொடர்பு கொள்ள பல மைல் சுற்றி போக வேண்டிய நிலைமை. இத்துன்பத்திலிருந்து விடுபட அவர்களுக்கு தீர்வு சொல்ல யாரும்o இல்லாத ஒரு சூழ்நிலையில் தொலை தூர கிராமத்திலிருந்து மாமிச மலையோ என்றோ சொல்லத்தக்க அளவில்காண்போர் பிரமிக்கத்தக்க அளவில் அவனுடைய உடலமைப்பு இருந்தது. அவன் ஒரு பெருந்தீனிகாரனும் கூட.ஊர் மக்களின் துயரத்தை புரிந்து கொண்ட அவன் ,தன்னை பற்றி பெரிதாக பருப்புரை பண்ணினான்.தன்னை ஒத்த உடல் வலிமை இந்த சுற்று வட்டாரத்தில் யாருக்கும் இல்லை எனவும் பென்னம்பெரிய மலைகளை புரட்டி உள்ளதாகவும் யானைகளை ஒரே கையினால் அடித்து வீழ்த்தியிருப்பதாகவும் தன்னைப்பற்றி பீற்றி கொண்டான். ஊர் வம்பர்கள் சிலரை தன் கை வசமாக்கிகொண்டான் இந்த மாமிச மலை.அவர்களும் இவனயைபற்றி ஆஹா ! ஓஹோ ! என இன்னும் பல பொய்களையும் புனைகதைகளையும் அவிழ்த்து விட மாமிச மலையின் புகழ் அக்கிராமம் முழுக்க பரவியது. பெருவாரியான மக்களும் அதை நம்ப தொடங்கினர்.

ஊரின் முக்கியஸ்தர்கள் சிலர் நமது ஊரின் மலை பிரச்னைக்கு ஒரு தீர்வை இவரிடமே கேடகம் என கருத்து தெரிவிக்க ஊராரும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொன்றனர்.

ஊர் நிர்வாகிகள் அந்த மாமிச மலையிடம் தங்கள் பிரச்சினையை முறையிட்டனர். அவர்களின் முறையீட்டை கேட்ட மாமிச மலை பக பக என நிலமே அதிரும்படி சிரித்த அவன் ஊராரை ஏளனமாக பார்த்து விட்டு என்னால் அதை தீர்க்க முடியும் ,ஆனால் அதற்கான விலையை கொடுக்க உங்களால் முடியாது ,நீங்கள் போகலாம் என்றான். மனங்கலங்கிய ஊரார் அந்த சதைப்பிண்டத்தின் காலில் விழுந்து மன்றாடினர்.

அவர்களின் மன்றாட்டத்தில் மனமிரங்கியஅந்த சதைப்பிண்டம் ஊரின் மலையை தூக்க ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும்.அந்த அவகாசம் எதற்கெனில் அந்த மலையை பெயர்க்க ஊட்டமிகு உணவுகளை நான் உட்கொள்ள வேண்டும் என்றான். சொல்லுங்கள் பலவானே !என்ன உணவு வேண்டும் !என ஒரே குரலில் கேட்க தனது அன்றாடபட்டியலை விபரித்தான்.

இதோ அந்த பட்டியல்:


  • நூறு அவித்த முட்டை.

  • பொறித்த கோழி ஐம்பது.

  • இருபது ஆடுகள்

  • மாட்டிறைச்சி பத்து கிலோ.

  • எழுபது லிட்டர் பால்.

  • பசு நெய் நாற்பது கிலோ.

இந்த பட்டியலை கெட்ட ஊரார் மலைத்தனர். அக்கூட்டத்தில் இருந்த சதைப்பிண்டத்தின் கையாட்கள் ஊராரை உசுப்பேற்றி விட்டு உணவு பட்டியலுக்கு சம்மதிக்க வைத்தனர்.


அன்றாடம் மலையென குவிக்கப்பட்டது இறைச்சி,பால்,நெய் வகைகள். சதைபிண்டமும் அவனது ஊர் வம்பு கையாட்களுக்கும் தின்று தீர்த்தனர்.



இவ்வாறாக ஆறு மாதம் நிறைவு பெற இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்க மலைப்ப்பெயற்சிக்காக ஊரே விழாக்கோலம் பூண்டது.


அந்த நாளும் வந்தது .தாரை,தப்பட்டை,செண்டை,மேளம் முழங்க மலை மரியாதையை உடன் ஊர்வலமாக அந்த சதைப்பிண்டம் அழைத்து வரப்பட்டான்.


ஊராரை சுற்றுமுற்றும் பார்த்த அந்த பெருந்தீனி சதைப்பிண்டம் எல்லாரும் ஜோராக ஒருமுறை கை தட்டுங்கள் என சொல்ல ஊராரும் அவ்வாறு


செய்தனர். தனது இஷ்ட தெய்வங்களை கண்ணை மூடி வேண்டிக்கொண்ட அவன் நிமிர்ந்து நின்ற அந்த குன்றின் அடிவாரத்தில் தான் இரு கொழுத்த கரங்களையும் வைத்து மூச்சையடக்கி அம்மலையை தூக்க முயற்சித்தான். அம்மலை அசைவதாக இல்லை. பல முறை இங்ஙனம் முயற்சித்து விட்டு ஊராரை பார்த்து கூறினான்,"' நீங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை கொடுத்தால் இம்மலையை தூக்கி விடுவேன் என சொல்ல ஊரார் திரு திரு என முழித்தனர். பலவானே ! எங்களால் முடியாது என்று சொல்லித்தானே உங்களை கூப்பிட்டோம் என பரிதாபமாக விடையிருக்க எகத்தாளமாக சிரித்தான் அந்த சதைப்பிண்டம்.


'(நாளை தொடரும் ............