சனி, 20 டிசம்பர், 2008

பாகிஸ்தானின் கைக்கூலிகளும் ,பாசிச நேசர்களும்

மும்பை பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து தேசமே ஒரு குரலில் பேசும்போது பா.ஜ.க. மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகின்றது. டிசம்பர் ௨0 தேதியிட்ட த ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை பாருங்கள்.
"ஒன்பது வருடங்களுக்கு முன்னர்பா.ஜ.க. ஆட்சியில் நடந்த விமான கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கந்தகாருக்கு அழைத்து சென்று ஒப்படைத்தது போல் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் அதே மாதிரி அப்பயங்கர வாதிகளை அழைத்து செல்வேன் என பா.ஜ.க. வின் மூத்த தலைவரும் அன்று பயங்கர வாதிகளை அழைத்துசென்றவருமான ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். அவரின் இக்கருத்தை பா.ஜ.க.வின் மற்றொரு தலைவர் கோபிநாத் முண்டே ஆதரித்தார் "
ஆனால் மும்பையில் ஐயத்துக்கிடமான வகையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கறேவின் கொலை தொடர்பாக விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நடுவண் அமைச்சர ஏ,ஆர்.அந்துலே பா.ஜ.க., சிவசேனை போன்ற பாசிச கட்சிகளினால் குறிவைக்கப்படுவது மட்டுமில்லாமல் அவரின் மீது பாகிஸ்தானின் கைக்கூலி என சேறு வாரி இறைக்கப்படுகிறது . அவரும் தனது பதவி விலகல் கடிதத்தை மன்மோகன் சிங்குக்குக்கு அனுப்பிவிட்டார். காங்கிரஸ் மேலிடமோ அந்துலேயின் கருத்துக்கள் குறித்து அதிருப்தியை அடைந்துள்ளது. ஆனால் விமான கடத்தலை ஊக்குவிக்கும் பா.ஜ.க. வின் பாலோ மிக மென்மையாக நடந்துகொள்கிறது.
பாசிச எதிர்ப்பு உணர்வலைகளின் மூலம் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தற்சமயம் பா.ஜ.க. இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுபடுகின்றது. நிதித்துறையில் தோல்வி அடைந்த ப.சிதம்பரம் தனக்கு முந்தி உள்துறை பொறுப்பு வகித்த சிவராஜ் பாட்டீலை விட பாசிசத்திற்கு நெருக்கமானவராக காட்சி தருகிறார். போடா ,தடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த ஆள் தூக்கி சட்டமானது துப்பாக்கி, குண்டு மூலம் நடத்தப்படும் ஆள்கொலைகளையும்
மட்டுமே பயங்கரவாதம் என கணக்கில் எடுக்கும். ஹிந்து பாசிசம் கொடுவாள், திரிசூலம் ,கத்தி,ஈட்டி கொண்டு செய்யும் கொலைகள் இந்த நவீன ஆள்தூக்கி சட்டம் கண்டுகொள்ளாது.
அக்கிரம்த்திற்கான தெளிவான அழைப்பொலி அல்லவா இது?....
இவர்கள் தேசத்தை எங்கே அழைத்துச்செல்கின்றார்கள்? கையில் இருக்கும் ஆட்சியை தக்கவைக்க
முயலும் காங்கிரஸின் தவிப்பு , அத்வானியின் தலைமை அமைச்சர் பதவி கனவு, ஆர்.எஸ்.எஸ். இன் ஹிந்து ராஜ்ய,அகண்ட பாரத செயல் திட்டம் என பல்முனைத்தாக்குதல்களுக்கிடையே என் அருமை தேசம் கிடந்து தத்தளிக்கிறது. இந்த பதவிப்பித்தும்,தன்னலமும் பிடித்த காங்கிரஸ், பா.ஜ.க.வின் பெயர்களில் மட்டும்தான் மாற்றமே தவிர அமைப்பிலும்,திட்டத்திலும்,அளவிலும் இரண்டுமே ஒன்றுதான். இவர்களுக்கு புரியக்கொடிய மொழி வாக்குச்சீட்டு தான்.
கட்சி மாற்றி மாற்றி வாக்களித்த நிலைகளை மாற்றி இந்த பதவி பித்தர்களை நம் பின்னே வர வைக்கும் சூத்திரம் வகுக்கப்பட வேண்டும் . இதை விட்டு விட்டு காங்கிரஸின் கையாலாகாத துரோக போக்கை எண்ணி கலங்குவதிலும் ,பாசிஸ்டுகளின் சதி திட்டங்களை கண்டு கொதிப்பதிலும் எவ்வித பொருளுமில்லை.