திங்கள், 22 டிசம்பர், 2008

தமிழீழமும் தமிழகமும்

தமிழீழமும் தமிழகமும்
‘பூம்புணல்’ வலைப்பூ மிக அருமையாக உள்ளது. ஜெயமோகனுக்கு அளிக்கப்பட்டுள்ள எதிர்வினை மிக அருமை! சில இடங்களில் வார்த்தைகளின் கடுமையைக் குறைத்திருக்கலாம்.
தமிழகத்தில் இன்று தமிழீழம் குறித்துப் பேசும் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். வெளிப்படையாக ஈழத்தில் பாதிக்கப்படுவோர் ‘இந்துக்கள்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். ஹிந்துத்துவாவும் தமிழீழமும் தமிழ்த் தேசியமும் கைகோர்க்கும் அபாய மேகம் சூழ்ந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் தலைமையில் ஒரு குழு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்து, போர் நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
இதை ஃபாசிஸ இந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் சமூக நல ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கருத்தியலாளர்கள் அனைவரும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். விடுதலைப்புலிகளை காக்கவே அரசியல் தலைவர்கள் கூக்குரலிடுவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்த அபாயம் பெரியார் பிறந்த இம்மண்ணில் தடம் பதியாமல் காப்பது ஃபாசிஸத்தை எதிர்க்கும் ஒவ்வொரு சமூக நல ஆர்வலர்களின் கடமையாகும். இது குறித்த தெரிவான படைப்புகள் தகுந்த தரவுகளுடனும் வரலாற்றுப் பின்னணியுடனும் பூம்புணலில் வெளிக்கொணர வேண்டும் என விரும்புகிறேன்.
வாழ்த்துகளுடன்
தமிழ்க் குடிமகன்
மதுரை