புதன், 17 டிசம்பர், 2008

மலையும்,மகாதேவனும் தொடர்ச்சி...

கட்டுரையை மேற்கொண்டு தொடரும்முன் முந்தைய கட்டுரையில் விடுபட்ட சொற்களும்,பிழை திருத்தமும்: . மாமிச மலையோ என்று சொல்லத்தக்க அளவில் ஒருவன் வந்து சேர்ந்தான். பருப்புரை =பரப்புரை. கேடகம் =கேட்கலாம். மலைப்ப்ப்பெயற்சிக்காக =மலைப் பெயர்ச்சிக்காக.

இனி கட்டுரையினுள் நுழைவோம் :

........... நான் தனியொரு ஆளாக இம்மலையை தூக்க வேண்டும் என நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் நானும் அதற்கு தகுந்தமாதிரி ஆயத்தமாகி இருப்பேன். அதற்கு இன்னும் ஆறு மாதம் நான் ஊட்ட உணவை எடுக்க வேண்டும் என்றானாம்.''

ஒற்றாடல் துறையை வலுவாக்கினால்தான் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள முடியும் என சொல்வது மேற்கண்ட கதையில் வரும் பெருந்தீனி மாமிச பிண்டத்தைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது.ஏற்கனவே நம் நாட்டு மக்களின் பெருமளவிலான வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் இந்த உளவுத்துறை செயல்படும் விதத்தை அறிந்தால்தான் இவர்களின் வரைமுறையற்ற போக்கை நாம் புரிந்துகொள்ள இயலும்.

நாட்டின் அதி உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் உட்பட அனைத்து துறையினரின் வரவு,செலவு கணக்குகளை தணிக்கை செய்ய கட்டமைப்பு ஒன்று உண்டு. ஆனால் அயல் நாட்டு ,உள் நாட்டு ஒற்றாடல் துறையினருக்கு மட்டும் எந்த தணிக்கையும் இல்லை. அவர்கள் நாடாளுமன்றம் , நீதிமன்றம்,ஊடகம் உட்பட எந்த ஜனநாயக ,நீதி , நிர்வாக அமைப்பிற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. புதியதாக இயற்றப்பட்ட தகவல் அறியும் சட்டத்தின் கீழும் இவர்கள் வர மாட்டார்கள்.

அந்த அளவிற்கு வரைமுறையற்ற அதிகாரம்பெற்ற இவர்களுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசுக்குள் அரசாக இவர்கள் செயல்படுகின்றனர்.நாட்டின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் முன்னர் இந்த ஒற்றாடல் துறையினரின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்.இந்த வடிகட்டும் முறை காரணமாக எத்தனையோ நேர்மையான ,மன சாட்சிப்படி இயங்கும் அலுவலர்களும், சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்கு எதிரான உள்நாட்டு ,வெளிநாட்டு எதிரிகளை கண்காணிக்கவும், தடுக்கவும், முடக்கவும் இவர்களுக்கு முழு அதிகாரமும்,எல்லையில்லா சுதந்திரமும் உண்டு.

ஜனநயாக ,தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் நடுவண்,பிராந்திய அரசுகளின் அதிகாரமும் , ஆயுள்காலமும் ஐந்து வருடங்கள்தான். ஆனால் திரைமறைவில் இந்நாட்டை ஆளும் ஒற்றாடல் துறையினருக்கோ அவர்கள் ரிடயர் ஆகும் வரை அவர்களின் ராஜ்யம்தான் இந்த நாட்டில். இத்தனை ஆற்றலையும் பெற்ற ஒற்றாடல் துறை ஏன் மும்பை தாக்குதலை தடுக்க தவறியது ? என்ற கேள்வி நம் நாட்டு ஊடகங்களில் வெறும் முனகலாகவே முடிந்து விட்டது.

மும்பை தாக்குதலில் உள்துறை அமைச்சர் பதவி விலகி விட்டார். ஆனால் அவரின் கீழ் இயங்கும் ஒற்றர் சீமான்களுக்கு மேல் ஒரு தூசியும் படவில்லை. குடிமக்களையும் ,இந்திரா ,ராஜிவ் காந்தி உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்களின் உயிர்களையும் பாதுகாக்க தவறிய இவர்கள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை?

இந்த ஒற்றாடல் துறைகளைப்பற்றிய vimarsnakalai

பாருங்கள்:

அரசியல் ஆய்வாளரான ஹரீஷ் கரே :''ஒரு தலைப்பட்ச ,வேறுபாடு உடைய அரசியல் வர்க்கத்தினரின் காரணமாக ஒற்றாடல் துறை உள்ளிட்ட பாதுகாப்பு முகவான்மையினர் அரசியல் தலைவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டிப்படைக்கின்றனர் .நம் நாட்டின் அனைத்து சிக்கல்களுக்கும் பாகிஸ்தானின் ஒற்றாடல் துறையான ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று அரசியல் தலைமையை உளவுத்துறையின் ஒரு பிரிவினர் நம்ப வைத்துள்ளனர். இவ்வாறாக கடந்த பத்தாண்டுகளாக நடந்து வந்துள்ளது.இதனை நம்பி ஏமாறக்கூடிய தலைவர்களோ இந்த ஒற்றாடல் துறையினரை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் செயல்பட கட்டளையிடும் தைரியத்தை எப்போதுமே பெற்றதில்லை''.

முந்திய பா.ஜ.க . அரசியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரஜேஷ் மிஸ்ரா:''' நான் பொறுப்பிலிருந்தபோது ஒற்றாடல் துறையினரிடையே தகுந்த ஒருங்கிணைப்பு இல்லை .சவுத் பிளாக் இல் எனது அனுபவத்தில் ஒற்றாடல் துறையினரிடையே ஒருங்கிணைப்பு என்பதே இல்லை என்பதை நான் கூற இயலும்.அவர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடையும் நாம் மற்ற வேண்டும்,.ஒற்றாடல் துறையினர் தகவல்களை பரிமாறிக்கொள்வதை வெறுக்கின்றனர்.காரணம் என்னவெனில். ஒன்று தங்களுக்கு தகவல் தருபவர்களை மறைப்பதற்காக அல்லது தங்களது இயலாமையை மறைப்பதற்காக.ஐபி, ரா, ராணுவ தலைவர் ஆகிய மூவரும் ஒன்றாக என்னோடு தகவல்களைபரிமாறி கொள்வர் . ஆனால் அவைகளுக்கிடையே அறவே பேசிக்கொள்ள மாட்டார்கள் '' (சான்று :த ஹிந்து,டிசம்பர் பதிமூன்று.)

மேற்கண்ட மேற்கோள்கள் ஏதோ வழிப்போக்கரின் கருத்துக்கள் அல்ல .அறிவுஜீவியினதும் ,பாசிச அரசின் கீழ் உளவு துறைகளின் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்தவர்களின் பெறுமதிமிக்க ஆய்வும்,அனுபவமும் ஆகும்.

இவை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசும் அதன் புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இருக்கின்ற சுமை போதாது என்று புதிய ஒரு பெருந்தீநிக்காரனை {நடுவண் புலனாய்வு முகமை}உருவாக்க போகிறார்களாம். ஏற்கனவே இருக்ககூடிய ஐ.பி,,ரா போன்ற கையாலாகாத அமைப்புக்கள் கலைக்கப்படுமா? அல்லது கடமை தவறியதற்காக தண்டிக்கவோ அல்லது குறைந்தபட்சம் விசாரணைக்காவது உள்ளாவார்களா ?இவை எதற்கும் விடை கிடிக்கப்போவதில்லை. பாசிசபா.ஜ.க . வின் கொடுங்கோல் ஆட்சிக்கு மாற்று என சொல்லி ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு ,இன்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சூப்பர் பா.ஜ.க. வாக தன்னை உருமாற்றிகொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: